இலங்கை மாணவர்களுக்கான இந்திய புலமைப்பரிசில் திட்டம்!

Date:

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்கு பல்வறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

முன்னணி இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவம்/துணை மருத்துவம், நவநாகரீக வடிவமைப்பு, மற்றும் சட்டத்துறை சார்ந்த கற்கைகள் தவிர்ந்த பல்வேறு துறைகளிலும் கல்வியினைக் கற்பதற்காக இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

இலங்கை பிரஜைகளுக்கென பிரத்தியேகமாக வழங்கப்படும் இப்புலமைப்பரிசில்கள் 2025-2026 கல்வி ஆண்டுக்கானவையாகும்.

2. கீழ் பின்வரும் கற்கைநெறிகளுக்காக இந்த திட்டத்தின் கீழ் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன;

a) நேரு ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டம்

b) மௌலானா ஆசாத் புலமைப் பரிசில் திட்டம்: பொறியியல், விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் முதுமாணி பட்டப்படிப்புகள்.

c) ராஜிவ் காந்தி புலமைப் பரிசில் திட்டம்: பொறியியல் இளமாணி மற்றும் தொழில்நுட்பவியல் இளமாணி பட்டப் படிப்புகளுக்கு வழிசமைக்கும் ‘தகவல் தொழில்நுட்பத் துறைகளிலான பட்டப்படிப்புக் கற்கைநெறிகள்.

d) டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பொதுநலவாய புலமைப் பரிசில் திட்டம்: பொறியியல், விஞ்ஞானம், வர்த்தகம், பொருளியல், வணிகம், மானுடவியல் மற்றும் கலை உட்பட அனைத்து பட்டப்படிப்பு/பட்டமேற்படிப்பு/முதுமாணி (Undergraduate/Post Graduate & PhD ) கற்கைநெறிகளை இந்தத் திட்டம் உள்ளடக்குகின்றது.

3. அனைத்துப் புலமைப் பரிசில்களும் கற்கை நெறிகளின் முழுமையான காலத்திற்கும் கல்விக் கட்டணம், மாதாந்த அடிப்படைச் சலுகைக் கட்டணம், மற்றும் புத்தகங்கள் & காகிதாதிகளுக்கான வருடாந்த கொடுப்பனவு என்பவற்றை உள்ளடக்குகின்றது.

ஏனைய பல்வேறு அனுகூலங்களுடன் இந்தியாவிலுள்ள அண்மித்த பயணச் சேரிடங்களுக்கான விமானக் கட்டணம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கல்விச் சுற்றுலாவுக்கான வருடாந்தக் கொடுப்பனவு என்பனவும் வழங்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு குறித்த பல்கலைக் கழக வளாகத்தினுள் விடுதி வசதிகளும் வழங்கப்படும்.

4. இந்தப் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக தகுதி வாய்ந்த இலங்கைப் பிரஜைகளை இந்திய அரசாங்கம் தெரிவு செய்கிறது.

இந்தியாவிலுள்ள சிறந்த பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்களுக்கான கற்கைகளைத் தொடர்வதற்கு தகுதிவாய்ந்தவந்தவர்களை தெரிவுசெய்யும் செயற்பாடுகள் இலங்கை கல்வி அமைச்சுடனான கலந்தாலோசனையில் மேற்கொள்ளப்படும்.

இவ்விடயம் தொடர்பாக தேவையான தகவல்களை கல்வி அமைச்சின் www.mohe.gov.lk எனும் இணையத்தள முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

இந்த கற்கை நெறிகளுக்கான தகைமை மற்றும் தெரிவு செய்தல் நடைமுறை தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் இலங்கை கல்வி அமைச்சு அல்லது கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் (eduwing.colombo@mea.gov.in) ஆகியவற்றை அணுகி தகவல்களைப்பெறமுடியும்.

 

 

Popular

More like this
Related

சவூதி அரேபியாவின் பிரதம முஃப்தியும், மூத்த அறிஞர்கள் குழுவின் தலைவருமான ஷேக் அப்துல் அஸீஸ் ஆல்-ஷேக் காலமானார்.

சவூதி அரேபியாவின் பிரதம முஃப்தியும், மூத்த அறிஞர்கள் குழுவின் தலைவருமான ஷேக்...

பாலஸ்தீன் நாட்டை அங்கீகரித்தல்: ஒரு இராஜதந்திர பார்வை!

உலக நாடுகளின் திடீர் பலஸ்தீன ஆதரவுக் குரலின் தீவிரம் குறித்தும், அதன்...

ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ...

சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம்: உலக இஸ்லாமிய சமூகத்திற்கான சவூதியின் அர்ப்பணிப்பு

இம்ரான் ஜமால்தீன் உலக முஸ்லிம் சம்மேளனத்தின் இலங்கைகான பிரதிநிதி   சவூதி அரேபியா இன்று உலக...