சவூதி அரேபியாவும் இலங்கையும் வருடாந்திர ஹஜ் ஒப்பந்தத்தில் ஜனவரி 11 சனிக்கிழமை ஜெட்டாவில் உள்ள ஹஜ் அமைச்சில் கையெழுத்திட்டன.
ஹஜ் துணை அமைச்சர் அப்துல் பத்தா பின் சுலைமான் மஷாத் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் டாக்டர் ஹினிதுமா சுனில் செனவி ஆகியோருக்கு இடையே இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
தேசிய ஒருங்கிணைப்பு துணை அமைச்சர், முனீர் முலாஃபர்,ஸவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் ஆகியோரும் முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் நவாஸ், இலங்கைக்கான துணைத் தூதுவர் மஹ்பூசா லாபிர் ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகி இருந்தனர்.