இஸ்ரேலிய இராணுவ வீரர்கள தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகின்றது. 2023 அக்டோபரில் காசாவில் போர் தொடங்கியது முதல் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொள்வது படிப்படியாக அதிகரித்து வருவதாக இஸ்ரேல் இராணுவம் ஏற்றுக் கொண்டுள்ளது.
காசா பகுதிக்குள் தாக்குதல் நடவடிக்கைக்காக நுழையும் படையினர் எந்த நேரத்தில்; எந்தப் பக்கத்திலிருந்து கொடிய தாக்குதல் நடக்குமோ என்ற அச்சம் காரணமாக பித்து பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதால் இந்த பயத்தை விட மரணமே சிறந்தது என்று நினைத்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இதுமட்டுமின்றி, இந்த அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான வீரர்கள் இராணுவத்தை விட்டு ஓடிச் செல்லவும், இளைஞர்கள் சேவையில் இணைய மறுக்கவும் ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு நேர் மாற்றமாக காசாவில் உள்ள பலஸ்தீன வாலிபர்களும் ஆண்களும் தேசத்திற்காக உயிரை தியாகம் செய்யும் வேட்கை அதிகம் அதிகமாக ஹமாஸ் இயக்கத்ததுடன் சேர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ‘உலக தாதா’ என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்க இராணுவத்தின் நிலை மிக நகைப்பிற்கிடமானது.
அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பாகிய பென்டகனின் கூற்றுப்படி,
உலகப் போருக்குப் பிறகு சில வெளிநாடுகளில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைளின் போது எதிரிகளுடனான நேரடி மோதல்களை விட மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஒன்பது மடங்கு அதிகம் ஆகும்.
இதில் விசேடம் என்னவெனில், அமெரிக்கா தனது பலத்தை காட்ட ரஷ்யா, சீனா போன்ற பலம் வாய்ந்த நாடுகளை தேர்ந்தெடுக்காலம், குள்ள நரித்ததனமாக மூன்றாம் உலக நாடுகளான வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா, ஈரான் போன்ற பலவீனமான நாடுகளையே எப்போதும் தேர்ந்தெடுப்பதாகும்.
அது போன்ற நாடுகளிலும் அமெரிக்கா சந்தித்தது கேவலமான தோல்வியையே.
சமீபகாலமாக, பொய்யான காரணங்களைக் கூறிக்கொண்டு மேற்குறிப்பிட்டது போன்ற தமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத நாடுகளுக்குச் சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டு அமெரிக்கா வாங்கிக் கட்டிக் கொண்ட கேலிக்கூத்தை மூழு உலகமும் கண்டது.
அது போன்ற நடவடிக்கைகளின் போது அமெரிக்க இராணுவம் பெரும்பாலும் முகாம்களில் உயிரை கையில் பிடித்த வண்ணம் தங்கியிருக்கும் அல்லது எதிரி பகுதிகள் வழியாக எந்தப் நேரத்தில் எந்த பக்கத்திலிருந்து மரண தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுமோ என்று பயந்த படி செல்லும்.
இந்த தொடர்ச்சியான மன அழுத்தம் காரணமாக, அமெரிக்க வீரர்கள் இறுதியில் பித்துப் பிடித்து தற்கொலை செய்து கொள்ள முனைகின்றனர்.
சுருக்கமாக சொன்னால், சில்வெஸ்டர் ஸ்ஃடெலோன், சக் நோரிஸ், ஆர்னால்ட் ஸ்வார்ஸ்னெக்கர் போன்ற நடிகர்கள் ஹாலிவுட் திரைப்படங்களில் தோன்றி, வியட்நாம் அல்லது ஆப்கானிஸ்தானிற்கு தனி ஆளாகச் சென்று இருபது, முப்பது எதிரிகளைச் இயந்திரத் துப்பாக்கிகளால் சாரமாரியாக சுட்டுக் கொன்று விட்டு, பிறகு ஹெலிகாப்டர் ஒன்றில் தொற்றியபடி திரும்பி வருவார்கள்.
ஆனால் உண்மையான கள நிலைமை அதுவல்ல. உண்மை என்னவென்றால், அசல் வாழ்வில் அமெரிக்க ஹீரோக்கள் அதிகம் போர் களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் எதிர்த்துப் போராடி மடிவதை விட முகாம்களில் இருந்தபடி பயந்தே சாகின்றார்கள் என்பதே ஆகும்.
இராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மற்றும் சேவையை விட்டு விரண்டோடும் இந்த பாதகமான போக்கை தடுக்க இஸ்ரேலிய பாதுகாப்புப் பிரிவு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
போர் தொடங்கி 15 மாதங்களில் தற்கொலை செய்து கொண்ட இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 28 ஆக இருப்பதாகவும், இதனுடன் ஒப்பிடுகையில், 2021 மற்றும் 2022ல் முறையே 14 மற்றும் 11 வீரர்கள் மட்டுமே தற்கொலை செய்துள்ளனர் எனவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் பிரிவு கூறுகின்றது.
இது தவிர, 2023 அண்டில் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலிய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 558 ஆக இருந்ததாகவும் அது, 2024 ஆண்டில் 363 ஆக குறைந்துள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஹமாஸ் போராளிகளின் கூற்றுப்படி, இந்த எண்ணிக்கை பொய்யானவை என்பதோடு தமது தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை இதை விட மிக அதிகம் எனக் கூறப்படுகின்றது.
போரில் ஈடுபடும் தரப்பினர் தங்களின் பின்னடைவைக் குறைத்தே குறிப்பிடுவது உலக வழமையாகும்.
இதேவேளை, மோதல்கள் தொடர்பான விபத்துக்களால் 23 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் இராணுவத்தின் மனிதவளத் துறைத் தலைவர் ஊடக நேர்காணல் ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.
இராணுவ வீரர்களின் தற்கொலை பிரச்சினைக்கு தீர்வு காண 24 மணி நேர உள நல ஆலோசனை சேவைகளை வழங்கவும் இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் கூறினார்.
இதனிடையே, இஸ்ரேல் நாடாளுமன்றமான நெஸட்டில் கருத்து தெரிவித்த பேராசிரியை தாமர் ஹெர்மன், இராணுவ வீரர்களின் தற்கொலை குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் வெளியிடும் அறிக்கைகள் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாகக் குறைந்துள்ளமை அண்மைய கருத்து கணிப்பீடொன்றின் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளதாகக் கூறினார்.
மேலும், உலகில் உள்ள ஏனைய நாடுகளின் பாதுகாப்புப் பிரிவினரை விட தமது பின்னடைவுகள் பற்றிய செய்திகளை திரித்தும் குறைத்தும் கூறுவதில் இஸ்ரேல் இராணுவம் புகழ் பெற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
(Article Source: france24)