இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை புதிதாகப் பிறந்த 238 குழந்தைகள் உட்பட 1,091 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர், காசா பகுதியில் இஸ்ரேல் இனப்படுகொலைப் போரை ஆரம்பித்தது.
உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் தகவல்படி, இதுவரை 45,550 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குகின்றனர். மேலும், 108,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த திங்களன்று மட்டும், குளிர்காலத்தின் கடுமையான பாதிப்பால் ஆறு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
காசா பகுதியில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2024 நவம்பரில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் ஆகியோருக்கு போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
குழந்தைகளின் உயிரிழப்பு மற்றும் பெண்களின் துயரம், இந்தப் போரின் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.