இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்: உலக நாடுகள் வரவேற்பு

Date:

காசாவில் 15 மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 19ஆம் திகதி முதல் போர்நிறுத்தம் அமுலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கியது.

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தி வந்தது. இந்தப்போரில் ஏராளமான உயிர்கள் பலிக் கொடுக்கப்பட்டதுடன், கடும் பொருட்சேதங்களை ஏற்படுத்திய இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் முயற்சித்து வந்தன.

பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த வேளையில், இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே போர்நிறுத்தம் குறித்து இறுதி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஏற்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.

காசா போர்நிறுத்தம் குறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், 400 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த மாபெரும் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி என தெரிவித்தார். மேலும், இந்த முடிவு பல இழப்புகளை சந்தித்த பலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை கிடைக்க உதவும் என கூறினார்.

காசா போர்நிறுத்தம் அனைவருக்குமான நல்ல செய்தி என்றும், நீண்ட காலமாக நிலவி வரும் மோதலுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்தம் சரியான மற்றும் அவசியமான நடவடிக்கை என்றும், இஸ்ரேலிய மக்களை மீண்டும் திரும்பிக் கொண்டுவருவதைவிட மிகப்பெரிய தார்மீக, மனிதாபிமான கடமை எதுவுமில்லை என இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் கூறினார்.

இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையிலான காசாவில் போரினால் ஏற்படும் மிகப்பெரிய துன்பங்களைக் குறைப்பதே தற்போதைய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

காசா போர்நிறுத்த ஒப்பந்தம் மதிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் வலியுறுத்தியுள்ளதுடன் காசா விவகாரத்தில் ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், “காசாவில் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் மற்றும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம்.

இது காசா மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகளை வழங்க வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவும், போர் நிறுத்தம் செய்யவும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்பவும் நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Popular

More like this
Related

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...

தேசிய பூங்காக்களை பார்வையிட Online ஊடாக நுழைவுச்சீட்டு

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நேற்று (10) முதல் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை...

ஸஹீஹுல் புகாரி ‘கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு!

ஸஹீஹுல் புகாரி 'கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்'  நூல் வெளியீட்டு...