இஸ்ரேல் ஹமாஸ் யுத்த நிறுத்த  ஒப்பந்தம் நாளை காசா நேரப்படி காலை 8.30 மணிக்கு ஆரம்பம்!

Date:

சுமார் 50,000 மக்களை படுகொலை செய்து ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை காயப்படுத்தி வீடுகளையும் பாடசாலைகளையும் சகல கட்டமைப்புக்களையும் முற்றுமுழுதாக துவம்சம் செய்து கடந்த 15 மாதகாலமாக இஸ்ரேல் மேற்கொண்ட அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகளின் பகீரத முயற்சியால் உடன்பாடு காணப்பட்டு இஸ்ரேல் ஹமாஸ் போர்நிறுத்தத்தின் முதலாவது கட்டம் நாளை காசா நேரப்படி அதாவது இலங்கை நேரப்படி காலை 11 மணிக்கு ஆரம்பமாகிறது.

முழு உலகமும் எதிர்ப்பார்த்திருக்கின்ற யுத்த நிறுத்தம் நிரந்தர யுத்த நிறுத்தமாக மாறி முழு பலஸ்தீன மக்களும் நிரந்தர சமாதான காற்றை அனுபவிக்கின்ற காலம் உதயமாக நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக..

போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஏற்கனவே ஹமாஸ் ஒப்புதல் அளித்திருந்தது. பிரதமர் அலுவலகம் ஜனவரி 17-ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்த நிலையில், இஸ்ரேலிய அமைச்சரவையும் தன்னுடைய ஒப்புதலை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...