உண்டியல் – ஹவாலா பண பரிவர்த்தனைகள் சட்டவிரோதமானது அல்ல: ஹர்ஷ

Date:

உண்டியல் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்ற முறைகள் இலங்கையில் சட்டவிரோதமானவை அல்ல என்று பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (COPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (08)  நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எவ்வாறாயினும், இலங்கையில் எந்த வகையிலும் முறைமைகள் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த அமைப்புகளின் மூலம் சர்வதேச பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்கள் ஜூன் 2024 முதல் மே 2025 வரை 12 மாதங்களுக்குள் பதிவு செய்ய முன்மொழியப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு  இலங்கை மத்திய வங்கியிடம் COPF கோரியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, உண்டியல் மற்றும் ஹவாலா முறைகள் தொடர்பான முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...