இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து விரைவான நீதியை நிலைநாட்டுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தி புதன்கிழமை (29) கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்களும் இணைந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் நீதியிற்கான இக்கோரிக்கையை அரசு முறையாக கவனிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.