என்.எம். அமீனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது இன்று!

Date:

ஊடகத்துறையில் சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று (07) மவுண்லவினியா ஹோட்டலில் (Mount Lavinia Hotel) நடைபெறவுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறுகின்ற இந்நிகழ்வு இம்முறை 25ஆவது தடவையாக நடைபெறவுள்ளது.

இம்முறை அச்சு ஊடகத்துறையில் 18 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளதுடன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் 5 பேருக்கு வழங்கப்படவுள்ளன.

அம்மையப்ப பிள்ளை யோகமூர்த்தி,

‘சிரித்திரம்’ சஞ்சிகையில் அரசியல் கேலிச் சித்திர வரைபவராக தனது ஊடக பயணத்தை ஆரம்பத்த இவர் 1996இல் முழு நேர ஊடகவியலாளராகினார்.

வீரகேசரிக்கு மொழிப் பெயர்ப்பு ஆக்கங்களை வழங்கியதோடு தினக்குரல் பத்திரிகையில் மொழிப் பெயர்ப்பாளராகவும் கேலிச்சித்திர கலைஞராகவும் இணைந்து கொண்டார். இதுவரை அவர் 5000 இற்கும் மேற்பட்ட அரசியல் கேலிச்சித்திரங்களை வரைந்ததோடு 5000 இற்கு மேற்பட்ட மொழிப்பெயர்ப்பு ஆக்கங்களையும் படைத்துள்ளார்.

சத்திரிக்கா விஜேசுந்தர

பாடசாலை காலத்திலிருந்தே ஊடகத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் 1978 ஆம் ஆண்டு ‘தவச’ பத்திரிகையில் இணைந்து கொண்டார்.

பின்னர் ‘ரிவிரச’ வாரப்பத்திரிகையில் இணைந்து ‘தருரெச’ சிறுவர் பகுதியையும் ஆரம்பித்தார். 1992 ஆம் ஆண்டில் ‘லங்காதீப’ பத்திரிகையில் பிரதி ஆசிரியராகினார். அதிலிருந்து 2001 வரை ‘லங்காதீப’ தினசரி கட்டுரை பகுதிக்கு ஆசிரியராகினார்.

அவர் பல சிறுவர் நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘பஞ்சலா சஹ பஞ்சிலா’ புத்தகம் 2024ஆம் ஆண்டுக்கான அரச சாஹித்திய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

என்.எம். அமீன்

களனிய பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான இவர் 1976ஆம் ஆண்டில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ‘தினமனி’ பத்திரிகையில் ஆசிரியர் பீடத்திலிருந்து தனது ஊடக பயணத்தை ஆரம்பித்தார்.

24 வருடங்கள் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் பாராளுமன்ற அறிக்கையிடுபவராகவும் கடமையாற்றினார். ‘தினகரன்’ மற்றும் ‘தினகரன்’ வாரமஞ்சரியில் செய்தி ஆசிரியராகவும் அப்போது கடமையாற்றினார்.

அங்கிருந்த காலத்தில் அனைத்து தமிழ் வெளியீடுகளிலும் முகாமைத்துவ ஆசிரியராகவும் கடமையாற்றினார்.

பின்னர் ‘நவமணி’ பத்திரிகையில் பிரதான ஆசிரியராகவும் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

1995இல் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கென ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரமொன்றையும் உருவாக்கினார். தற்போதும் அவர் தலைவராகவும் செயற்படுகின்றார்.

பல்வேறு தேசிய சர்வதேச ஊடக அமைப்புக்களை அங்கத்தவராக இருந்து இவர் ஊடகத்துறைக்கு பங்களிப்பு செலுத்தியுள்ளார்.

தெற்காசிய ஊடக சுதந்திரம் (SAFMA)வில் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளராக இருந்த இவர் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் 22 வருடங்களுக்கு மேலாக அங்கம் வகித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் கற்கைநெறிக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகம், Sri Lanka College of Journalism, இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகியவற்றிலும் வருகைதரு விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.

பென்ட் ரூபசிங்க

1963 இல் ஊடகத்துறையில் நுழைந்த இவர் ஊடக மேதாவி டி.பி தனபாலவின் கீழ் பயிற்சி பெற்றவராவார்.

‘தவச’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவின் இவர் கடமையாற்றினார். பின்னர் ‘அத்த’ பத்திரிகையிலிருந்து 30 வருடங்கள் பணியாற்றினார்.

பின்னர் ‘தினமின’ பத்திரிகையில் செய்தியாசிரியராக இணைந்து பிரதி ஆசிரியர், துணை ஆசிரியர் என உயர்ந்து தினமின பத்திரிகையின் ஆசிரியரானார்.

பின்னர் ‘தினகர’,  ‘பெரலிய’ பத்திரிகைகளுக்கும் பங்களிப்பு செய்தார்.
‘லங்காஇ நியூஸ்’ டிஜிட்டல் ஊடகத்திலும் தடம் பதித்தார். கடந்த 13 வருடங்களாக ‘மௌபிம’ பத்திரிகையின் ஆசிரியராகவும் பணிப்பாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

சனிட்டா கரீம்

பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் பட்டதாரியான இவர் 1970களில் ஊடகத்துறையில் நுழைந்தார்.

‘சன்’ பத்திரிகையில் பாராளுமன்ற அறிக்கையிட்டவரும் பின்னர் ‘தி ஹைலண்ட்’ பத்திரிகையிலும் கடமையாற்றினார். ‘fashion and society, travel and tourism’ இவரது முக்கியமான துறைகளாகும். தற்போது இவர் ‘சண்டடே ஹைலன்ட்’ பத்திரிகையில் கட்டுரை ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார்.

இந்நிகழ்வினை இலங்கை பத்திரிகைகள் சங்கம் (The Editors’ Guild) இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்பவற்றுடன் இணைந்து Newspaper Society of Sri Lanka, சுதந்திர ஊடக அமைப்பு (Free Media Movement ) உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (Sri Lanka Working Journalists’ Association) ஆகியன ஒழுங்கு செய்துள்ளன.

 

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...