கலீல் அல்-ஹய்யா தலைமையிலான எமது தூதுக்குழு நடுநிலையாளர்களான கத்தார், எகிப்து நாட்டவர்களுக்கு எமது ஹமாஸ் இயக்கத்தின் நிலைப்பாட்டை அதாவது யுத்த நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம் என்பவற்றுக்கான உடன்பாடான நிலைப்பாட்டை நாம் ஒப்படைத்துவிட்டோம் என ஹமாஸ் அறிவித்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து 15 மாதங்களாகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்து வருகின்றன.