இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி இன்றுடன் 545 நாட்கள் ஆகின்றன. இப்போரினால் ஏற்பட்ட பாதிப்புகள், அங்கு வாழும் மக்களது நிலையை மோசமாக்கியுள்ளது.
இன்றாகும் போது இடம்பெயர்ந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
மேற்கு கான் யூனுஸ் நகர் அருகே அல்–மவாசி பகுதியில் இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாம் இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
வடக்கு காசா ஆக்கிரமிக்கப்பட்டு 90 நாட்கள் ஆகின்றன.
கமால் அத்வான், பெயித் லஹியா பகுதியில் தாக்குதல்.
காசாவின் சிவில் பாதுகாப்பு படையின் கூற்றுப்படி, இடம்பெயர்ந்த 1000 பேர் மக்கள் மோசமான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். மழை காரணமாக கூடாரங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
காசாவில் கடும் குளிர்காலம்; ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து இதுவரை மூன்று குழந்தைகள் குளிரில் விறைத்து உயிரிழந்துள்ளன. கடும் குளிரிலிருந்து பாதுகாப்பு அளிக்ககூடிய தங்குமிடம் இன்மையே இதற்கு காரணம் என கான் யூனிசில் உள்ள நாசெர் மருத்துவமனையின் மருத்துவர் அஹமட் அல் பரா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஆக்கிரமிப்பு இராணுவம் தடை விதித்துள்ளது.
இஸ்ரேல் லெபனானுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகின்றது.
ஹிஸ்புல்லா இராணுவம் தனது பழைய நிலைக்கு திரும்பியுள்ளது என புதிய தலைவர் நைம் காசிம் தெரிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேல் நடத்தும் இடைவிடாத உக்கிர தாக்குதல்களில் 45,500க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வடக்கு காசாவில் இஸ்ரேல் கடந்த மூன்று மாதங்களாக கடும் முற்றுகைக்கு மத்தியில் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கை அங்கு பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில் வடக்கு காசாவில் பஞ்சம் ஒன்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ‘பஞ்ச முன்னெச்சரிக்கை அமைப்பின் வலைப்பின்னல்’ என்ற நிறுவனம் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலியப் படை மனிதாபிமான மற்றும் வர்த்தக உணவு விநியோகத்தை முற்றாக முடக்கி உள்ள ஜபலியா, பெயித் லஹியா மற்றும் பெயித் ஹனூன் உட்பட முற்றுகையில் உள்ள வடக்கு காசாவிலேயே இந்த பஞ்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.