கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளோம்: WHO அமைப்பிலிருந்து விலகும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யவேண்டும்

Date:

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கேரியாசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47-வது  ஜனாதிபதியாக  டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவர் பதவியேற்றதும், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.

மேலும் சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. ஆனால் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் பணியில் உலக சுகாதார அமைப்பு திறம்பட செயல்படவில்லை.

காலத்துக்கு ஏற்ப அந்த அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்யப்படவில்லை. அமெரிக்காவைவிட அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, உலக சுகாதார அமைப்புக்கு மிகக் குறைவாக நிதி ஒதுக்குகிறது. இவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்கா வெளியேறுகிறது என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

இதன்படி உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவி நிறுத்தப்பட உள்ளது. ஜனாதிபதி ட்ரம்பின் முடிவு குறித்து பல்வேறு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கேரியாசஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் வாழும் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் நாங்கள் முக்கிய பங்கு வகிக்கிறோம். நோய்க்கான மூலக்காரணம், அவற்றை தடுப்பது, புதிய வைரஸ் தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட மிக முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான உயிர்களை நாங்கள் காப்பாற்றி உள்ளோம். எங்கள் பணிக்கு அமெரிக்கா உறுதுணையாக இருந்து வருகிறது. வரும் காலத்திலும் அமெரிக்காவின் பங்களிப்பு தொடர வேண்டும்.

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்க அரசு மறுபரிசீலனை செய்யும் என உறுதியாக நம்புகிறேன் இவ்வாறு டெட்ராஸ் அதானோம் கேரியாசஸ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...