சிரேஷ்ட தாதி உமர் அலி இடமாற்றத்தை எதிர்த்து நிந்தவூர் வைத்தியசாலை முன்னால் போராட்டம்

Date:

நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மதியம் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பராமாரிப்பை உரிய முறையில் மேற்கொள்ளாமை தொடர்பில் கேள்வியெழுப்பிய சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலிக்கு  இடமாற்றம்  வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உரிய விசாரணைகளை பக்கச்சார்பின்றி நடாத்துமாறு  கோரியும் இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் முன்பாக ஒன்று கூடிய மக்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்த சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் இடமாற்றம் குறித்து மீள்பரிசீலனை வேண்டும்  என கேட்டுக்கொண்டனர்.

மேலும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை சம்பந்தமான காணொளி ஒன்று ஒரு சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருந்தது.

அதன்படி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நடைபெறுகின்ற முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்கும்,  நோயாளர்கள் பராமரிப்பில் கவனயீனமாக இருக்கின்றார்கள் என்பதை சுட்டி காட்டியதற்கும்,

வைத்தியர்கள் நேரத்துக்கு கடமைக்கு வருவதில்லைல்லை, ஆனால் மேலதிகநேர கொடுப்பனவுகளை எடுக்கின்றார்கள்.

கடமைக்கு வராமல் பொது விடுமுறைகளில் ஓய்வு நாட்களில் வேலை செய்ததாக பொய்யாக ஆவணங்கள் பூர்த்தி செய்து, அதனை வைத்திய அத்தியட்சகர் உறுதிப்படுத்தி அதன் பின்னர் அதற்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்று, நான் கூறியதற்கு கிடைத்த பரிசு இது என  பாலமுனை வைத்தியசாலைக்கு தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலி தனது முகப்புத்தகத்தில் தெளிவுபடுத்தி கூறியிருந்தார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் முஹமட் இஸ்மாயில் உமர் அலிக்கு இடமாற்றம் வழங்கியமை கண்டிக்கத்தக்கது எனவும்,

இவ்விடயம் குறித்து நீதியான விசாரணைகளை மேற்கொண்டு தீர்வினைப் பெற்றுக்க கொடுக்குமாறும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  அஷ்ரப் தாஹிர்  சுகாதார அமைச்சரை பாராளுமன்றத்தில் வைத்து  கேட்டுக்கொண்டார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...