நாட்டில் சிறுவர்கள் மத்தியிலும் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நோய் தொடர்பான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் ருவந்தி பெரேரா உள்ளிட்ட மருத்துவத்துறை நிபுணர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதுவரை காலமும் இந்நோய்கள் வயதானவர்கள் மத்தியிலேயே அதிகரித்து வந்தது. தற்போது சிறுவர்கள் மத்தியிலும் இந்த நோய் அதிகரித்து வருவதாகவும் 12,14 மற்றும் 16 வயதுகளுக்கு இடைப்பட்ட சிறுவர்களே மேற்படி நோயினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.