சீனாவின் ‘deepseek’ செயலிக்கு வரவேற்பு: அமெரிக்க பங்குச் சந்தை வரலாற்றில் மிகப் பெரிய சரிவு!

Date:

சீன செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் வரவால் தொழில்நுட்ப துறை ஆட்டம் கண்டுள்ளது.

இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு உலகில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. அதோடு, செயற்கை நுண்ணறிவு துறையில், தாமே தான் நம்பர் ஒன் என்று கருதும் அமெரிக்காவின் இறுமாப்பையும் அசைத்துள்ளது.

சீனா இப்போது தனது டீப்சீக் (DeepSeek) ஏஐ மாடலை வெளியிட்டுள்ளது. சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் 2023ஆம் ஆண்டில் டீப்சீக் நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனம் தான் இப்போது ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்று இரு மாடல்களாக வெளியிட்டுள்ளது.. இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்பதை அந்த நிறுவனம் அறிவிக்கவில்லை. மேலும், இப்போது யூசர்களால் R1 மாடலை மட்டுமே பயன்படுத்த முடியும்.

தற்போதுள்ள தகவல்களை வைத்துப் பார்த்தோம் என்றால் ஆர்1 என்பது வழக்கமான ஏஐ மாடல்.

அதேநேரம் ஆர்1 ஜீரோ என்பது முழுக்க முழுக்க தானாகவே கற்பித்துக் கொண்ட (self-taught) ஏஐ மாடலாகும்.

சீனா உருவாக்கியுள்ள இந்த டீப்சீக் ஏஐ சாட் ஜிபிடி உள்ளிட்ட ஏஐ மாடல்களுக்கு சவால் விடுபவையாகவே உள்ளது.

இந்த காலத்தில் ஏகப்பட்ட ஏஐ மாடல்கள் உள்ளன. அப்படியிருக்கும் போது இந்த டீப்சீக் மாடல் மட்டும் ஏன் பேசுபொருள் ஆனது என்ற சந்தேகம் வரலாம். இது முழுக்க முழுக்க இலவசமானது என்பதே இதற்குப் பிரதான காரணமாகும்.

இதேபோன்ற அதிநவீன மேம்பட்ட வசதிகளை சாட்ஜிபிடி-இல் பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு நாம் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இந்த டீப்சீக் ஏஐ மாடல் முழுக்க முழுக்க இலவசம். இதைப் பயன்படுத்த நாம் ஒரு ரூபாய் கூட செலுத்தத் தேவையில்லை.

சாட்ஜிபிடி மற்றும் ஜெமனி ஏஐ மாடல்களில் இலவச வசதி உள்ளன. ஆனால், பழைய வெர்ஷன்களை மட்டுமே நம்மால் இலவசமாகப் பயன்படுத்த முடியும். புதிய வெர்ஷன்களை பயன்படுத்தக் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால், டீப்சீக் ஏஐ மாடலுக்கு இதுபோல எந்தவொரு வரம்பும் இல்லை. முழுக்க முழுக்க இலவசம். அதுவும் அதிநவீன வசதிகள் அனைத்துமே இலவசமாகும்.

அதேபோல இந்த டீப்சீக் என்பது ஒரு ஓபன் சோர்ஸ் ஏஐ டூல் ஆகும்.. இதுவே டீப்சீக்கை மற்ற ஏஐ டூல்களில் இருந்த தனித்துக் காட்டுகிறது.

சாட்ஜிபிடி, ஜெமினி ஆகியவை க்ளோஸ்ட் சோர்ஸ் ஏஐ மாடலாகும். அதில் என்ன மாதிரியான கம்யூட்டர் கோட்களை பயன்படுத்தியுள்ளனர் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இந்த டீப்சீக் ஏஐ என்பது ஓபன் சோர்ஸ்.

இதை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என்பதே இதன் தனிச் சிறப்பாகும்.

இந்நிலையில்  தான் வார இறுதியில் ஆப்பிளின் அமெரிக்க ஆப் ஸ்டோரில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலி டீப் சீக். திங்கட்கிழமைக்குள் இந்த செயலி, தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அமெரிக்காவின் முன்னிலை குறித்த பயம் எழுந்ததன் காரணமாக பல அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

வால் ஸ்ட்ரீட்டின் ( உலக பங்கு சந்தைகளின் தலைமையிடமாக கருதப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்திருக்கும் பகுதி) செல்லப்பிள்ளையாக இருந்த செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிக்கும் நிறுவனமாக நிவிடியாவின் பங்குகள் திங்கட்கிழமை சந்தை மூடிய போது 17% குறைந்திருந்தது.

அதாவது 600 பில்லியன் டாலர் மதிப்பிலான இழப்பை சந்தித்துள்ளது என்விடியா. ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் படி, அமெரிக்க பங்குச் சந்தை வரலாற்றில் இதுவே மிகப் பெரிய சரிவாகும்.

மூலம்: பிபிசி

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...