சீனாவில் BYD உள்ளிட்ட உலகளாவிய தொழில்துறை தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி!

Date:

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன அரசுமுறைப் பயணமானது, இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியதோடு, புதிய பொருளாதார ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

இப்பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, BYD உள்ளிட்ட சீனாவின் முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் அமைந்தன. இது புத்தாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பரஸ்பர அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டியது.

இதன்போது 2025 பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது உட்பட, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து தீர்வுகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள புதிய எரிசக்தி வாகனங்களின் (NEV) உற்பத்தியாளர் என்ற வகையில் BYD, நாட்டில் நிலையான போக்குவரத்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, BYD தனது சுழற்சி இழப்பில்லாத தொழில்நுட்பங்களை (zero-emission technologies) உருவாக்குவதில் பயன்படுத்தப்படும் சிறப்பு அறிவு மற்றும் திறன்களை வெளிப்படுத்தியதுடன், இலங்கையின் நிலையான பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியது.

BYD நிறுவனமானது இலங்கையில் ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் CG Corp Global ஆகியவற்றின் கூட்டு முயற்சியான John Keells CG Auto கீழ் செயல்படுகிறது.

பசுமையான எதிர்காலத்திற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் இணங்கும் வகையில் புத்தாக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதில் இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...