செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு!

Date:

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் மீதமுள்ள 5 பேருக்கு எதிராக அடுத்த வாரம் வழக்கு தொடரப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது ஏழு ஜனாதிபதி வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணைக்குழு அதிகாரியொருவர் தெரிவிக்கையில், ”செலவு அறிக்கை சமர்ப்பிப்பு முடிந்த அன்றே தபால் மூலம் அறிக்கை அனுப்பப்பட்டதால், ஒரு வேட்பாளர் மீது வழக்கு தொடரப்படாது என கூறினார்.

மேலும், செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர் மீது வழக்குத் தொடரப்பட்டால், அந்த வேட்பாளர் மாகாண அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முடியாது என தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 1040 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

 

Popular

More like this
Related

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...