ஜனாதிபதி அநுர தலைமையில் 77 ஆவது தேசிய சுதந்திர தின விழா எளிமையான முறையில்..!

Date:

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் பெப்ரவரி 04ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

இம்முறை பொதுமக்கள் அதிகமாக பங்கேற்கக் கூடிய கொண்டாட்டமாக சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

நாட்டின் கௌரவத்தை மேலோங்க செய்யும் வகையில், சுதந்திர தின நிகழ்வுகள் வெகுவிமரிசையாகவும் அதேவேளை, செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் நடத்தப்படவுள்ளன.

சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று   தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த ஆகியோரும் விளக்கமளித்தனர்.

இதன்போது சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்  தேசிய நிகழ்வில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் பாடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” எனும் தொனிப்பொருளில் இந்த வருட சுதந்திர தின நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அன்றாடப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் மிகவும் எளிமையாக இந்த வருட நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதற்காக வேண்டிய வழமையாக காலி முகத்திடலில் இடம்பெறும் இந் நிகழ்வினை இந்த வருடம் சுதந்திர சதுக்கத்தில் நடத்த தீர்மானித்துள்ளோம்.

இந்த வருடம் 4,421 படையினர்கள் மாத்திரமே அணி வகுப்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். கடந்த முறையினை விட இது மிகக் குறைவாகும். இதேவேளை, கடந்த முறை 19 ஹெலிகொப்டர்கள் சுதந்திர தினத்துக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த வருடம் 03 ஹெலிகொப்டர்கள் மாத்திரமே பயன்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளன.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...