15 மாவட்டங்கள் சீரற்ற வானிலையால் பாதிப்பு!

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹகுரான்கெத்த வழியாக கண்டி செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு நேற்று மாலை 4:00 மணி முதல் இன்று மாலை 4:00 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை, வில்கமுவ, யடவத்தை மற்றும் உக்குவெல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்காக 2ஆம் நிலை செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

7 மாதங்களுக்குள் 1126 சிறுவர் துஷ்பிரயோக புகார்கள்!

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக...

நாட்டில் நாளாந்தம் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவு!

கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள்...

கஹட்டோவிட்டவில் முப்பெரும் நிகழ்வுகள்!

கம்பஹா மாவட்டத்தில் 9A மதிப்பெண்களை பெற்றோர், புதிய அரசியல் பிரதிநிதிகள் கௌரவம்,...

ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் இன்று ஜனாதிபதியின் உரை

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் இன்று...