அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் LGBTQ இற்கு எதிரான கொள்கைக்கு இலங்கையின் தாய்மார்கள் அமைப்பான அன்னையர் முன்னணி (Mothers Movement) அமைப்பு ஆதரவை வழங்கியுள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக நேற்றையதினம் (23) கூடிய இந்த அமைப்பானது, அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்க்கை சார்பு பிரசாரத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, அவரது முடிவானது, நாடுகளை அழிவுகரமான LGBTQ நிகழ்ச்சி நிரலில் இருந்து பாதுகாக்கிறது எனக் கூறியது.
இலங்கையில் சிதைக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டங்களை சட்டப்பூர்வமாக்குவதை சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை அன்னையர் முன்னணி இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் தர்ஷனீ லஹந்தபு குறிப்பிட்டார்.


