நள்ளிரவு முதல் சுப்பர் டீசல் விலை அதிகரிப்பு

Date:

நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 18 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC/ CEYPETCO) அறிவித்துள்ளது.

அந்த வகையில், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 313 இலிருந்து ரூ. 331 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் ஏனைய எரிபொருட்களின் விலைகள் மாற்றமின்றி பேண முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாத விலைத் திருத்தத்திற்கு அமைய, மண்ணெண்ணெய் விலை மாத்திரம் ரூ. 5 இனால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் CEYPETCO எரிபொருள் விலைகள் வருமாறு…

CEYPETCO/ LIOC

  • சுப்பர் டீசல்: ரூ. 18 அதிகரிப்பு – ரூ. 313 இலிருந்து ரூ. 331
  • மண்ணெண்ணெய்: விலையில் மாற்றமில்லை – ரூ. 188
  • பெற்றோல் 92: விலையில் மாற்றமில்லை – ரூ. 309
  • ஒட்டோ டீசல்: விலையில் மாற்றமில்லை  – ரூ. 286
  • பெற்றோல் 95: விலையில் மாற்றமில்லை – ரூ. 371

 

 

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...