– நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

Date:

இன்றையதினம் (07) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தெற்கு, சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்தின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய கடல் பகுதிகளில் முக்கியமாக மழை இல்லாத வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

Popular

More like this
Related

ஜப்பான் நோக்கி புறப்பட்டார் ஜனாதிபதி அநுர!

ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக...

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன எண் தகடுகள்

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய எண் தகடுகளை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று...

இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பலஸ்தீனா்கள் உயிரிழப்பு

மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் இராணுவம் வியாழக்கிழமை அதிகாலை முதல்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வருடாந்த மாநாடு நாளை!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடும் புதிய நிர்வாக...