யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அநுராதபுரம் பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
யாழில் வைத்து சிறப்புப் பொலிஸ் குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் மீது பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.