2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் இன்றைய தினம் (02) ஆரம்பமாகவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் ஜனவரி 24ம் திகதி வரை அனைத்து பாடசாலைகளையும் நடத்த கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பாடசாலை ஆரம்பமானதும் நாளை (03) முதல் இறுதி தவணை பரீட்சைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதியுன் நிறைவடைந்தது.
இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இதன்படி, அனைத்து பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.