புத்தளம் மணல்குன்று, கடையாக்குளம் பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்த பைசல் எம்.பி!

Date:

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் அவர்கள் நேற்று (30) புத்தளம் மணல்குன்று மற்றும் கடையாக்குளம் பகுதிகளுக்கு களப் பயணமொன்றை மேற்கொண்டு அங்குள்ள மக்களின் முக்கிய தேவைகளை கேட்டறிந்தார்.

இதன்போது மணல்குன்று பாடசாலை அதிபரும், ஆசிரியர்களும் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகளை பைசல் எம்.பியிடம் தெரிவித்ததுடன் நூர் மஸ்ஜிது நிர்வாகத்தினர் கத்தார் சரிட்டி மூலம் மஸ்ஜிதின் மீதமுள்ள பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அஷ்ரஃபியா மத்ரசா அதிபர்,  மத்ரசாவின் தேவைகள் மற்றும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பாதைகள் மற்றும் வடிகால்கள் தொடர்பான பிரச்சினைகளை அரசு ஆதரவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி உதவிகள் பெற முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் பைசல் எம்.பி தெரிவித்தார்.

அத்தோடு, கத்தார் சரிட்டி மூலம் நூர் மஸ்ஜிதின் மீதமுள்ள பணிகளை நிறைவு செய்ய தூதரகத்தின் மூலம் தொடர்பு கொண்டு உதவி செய்யப்படும் எனவும் அவர் மக்களிடம் உறுதியளித்தார்.

 

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (22) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரி விதிப்பால் தள்ளுபடி விலையை வழங்குவதில் சிக்கல்!

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத பெறுமதி சேர் வரி(VAT) வாசகர்களுக்குத் தள்ளுபடி...

ரபீஉனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை 

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 செப்டம்பர் மாதம் 22ஆம்...

தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு சுவிஸ் நாட்டிலுள்ள House of Religionsக்கு வருகை!

சுவிட்சர்லாந்து அரசின் கீழ் இயங்கும் அரசார்பற்ற நிறுவனம்  ஏற்பாடு செய்திருந்த மூன்று...