முஸ்லிம்களின் பாரம்பரிய எழுத்தணி கலையான அரபு எழுத்தணி கலையை மேம்படுத்தும் நோக்கோடு இலங்கை அரபு எழுத்தணி சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் பெண்களுக்கான அரபு எழுத்தணி பயிற்சி பட்டறை 2025 ஜனவரியில் 26ஆம் திகதி மாலை 9 மணி முதல் 5 மணி வரை இரத்மலானையில் அமைந்துள்ள நெஸ்ட் அகடமியில் ஏற்பாடாகியுள்ளது.
ஆன்மீகமும் அழகியலும் இரண்டறக் கலந்த, மிகுந்த பண்பாட்டு சிறப்புடைய இப்பாரம்பரிய கலையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள பெண்களும் யுவதிகளும் இப்பயிற்சி நெறியில் கலந்துகொள்ளலாம்.
விண்ணப்ப முடிவுத் திகதி ஜனவரி 10
மேலதிக தொடர்புகளுக்கு 077 8852767 வாட்ஸ்அப் மட்டும்.