பெண்கள் மற்றும் யுவதிகள் துன்பறுத்தப்பட்டதாகவும் அவர்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டு தாலிபான் அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சர்வதேச குற்றவிவியல் நீதிமன்றத்தில் பிரதான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தாலிபான்களின் உயர்மட்டத் தலைவர் ஹைபதுல்லாஹ் அஹன்ட்ஸதா (Haibatullah AKHUNDZADA) மற்றும் பிரதம நீதியரசர் அப்துல் ஹக்கீம் ஹக்கானி (Abdul Hakim HAQQANI) இருவரும் பாலின அடிப்படையில் மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று சந்தேகப்பதற்கான வலுவாக காரணங்கள் உள்ளன என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களையும் யுவதிகளையும் கிரிமினலாக கருதி துன்புறுத்துவதற்கும் பாலினம் தொடர்பான தாலிபான்களின் கருத்தியலுடன் ஒத்துப்போகாதவர்களை துன்புறுத்துவதற்கும் இவர்களே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.