போராடவும் கருத்து வெளியிடவும் சுதந்திரம் கோரி யாழ் பல்கலை மாணவர் உண்ணாவிரதம்!

Date:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (24) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக முன்றலில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் பின்வரும் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தியுள்ளனர்.

1. விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து.

2. ⁠போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்.

3. ⁠விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய்.

4. ⁠மாணவர்களின் கற்றலுக்கான சுதந்திரத்தை உறுதி செய்து மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கு.

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...