இலங்கையின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரி அண்மைக்காலமாக பல துறைகளில் பிரகாசித்து வருகிறது.
பல விளையாட்டுத்துறைகளிலும் பரீட்சைகளிலும் இன்னும் பல நிகழ்ச்சிகளிலும் இப்பாடசாலை பல மட்டங்களிலும் சிறப்பான தேர்ச்சிகளை பெற்று வருகின்றது.
அந்தவகையில் இந்நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் முதுகெலும்பாக கருதப்படுகின்ற இப்பாடசாலையின் 5ஆம் தர மாணவர்கள் இம்முறையும் மிகச்சிறப்பான முறையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி உயர்ந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
மொத்தமாக 243 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தாலும் அவர்களில் 228 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.
அவர்களில் எழுபது (70) மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 100சதவீதமாகும்.
இப்பரீட்சையில் சிறப்பான தேர்ச்சிகளைப் பெற்ற மாணவர்களுக்கு ‘நியூஸ்நவ்’ குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.