மறைந்த மாவை சேனாதிராசாவின் உடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த தலைவர் மாவை சேனாதிராசாவின் பூதவூடல் மக்கள் அஞ்சலிக் காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மாவையின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) அன்னாரின் இல்லத்தில் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
பின்னர் காலை 10 மணிக்கு அஞ்சலி உரைகள் இடம்பெற்று மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் இறுதிக் கிரியை நடைபெறவுள்ளது.