மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
எதிர்வரும் 6 மாத காலத்தை வரையறுத்து 20 வீத மின்கட்டண குறைப்பை இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்துமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பரிந்துரை செய்துள்ளது.
வீட்டுப் பிரிவின் கீழ் 0-30 வரையிலான அலகுகளுக்கான கட்டணம் ரூ.6 ஆக இருந்ததை ரூ.4 ஆகவும், 31-60 வரையிலான அலகுகளுக்கான கட்டணம் ரூ.9 இல் இருந்து ரூ.10 ஆகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹோட்டல் மற்றும் அதனுடனான தொழிற்றுறையின் மின்கட்டணத்தை 31 சதவீத்ததால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.