குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் ஹர்ஷன கெக்குனாவல உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (23) ஆஜர்படுத்தப்பட்டனர்.
2014 ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபா பணத்தை தேர்தல் பிரசாரங்களுக்கு தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டிருந்தனர்.
சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.