அண்மையில் இலங்கைக்கு அகதிகளாக வந்த ரோஹிங்யாக்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நாடற்ற ரோஹிங்யா மக்கள் குறித்து கவனம் செலுத்தும் ஒரு முக்கிய கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியில் இருந்து 5.00 மணிவரை கொழும்பு சமூகம் சமய நடுநிலையத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், ரோஹிங்யா மக்களின் பின்புலம், அவர்களின் துயரமான பயணம், இலங்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
இந்நிகழ்வை சமூகம் சமய நடுநிலையம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
அரசாங்கப் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் பொதுமக்களும் பங்குபற்ற முடியும்.
மேலதிக விபரங்களுக்கு: (SMS அல்லது Whatsapp செய்தி) அல்லது மின்னஞ்சல் மூலம். +94772580763/ +94777359678, nilushidewapura@gmail.com