வடமத்திய மாகாணத்தின் 11ஆம் தரம் சிங்கள இலக்கிய வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்
அதன்படி 600க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் உரிய வினாத்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மற்றுமொரு வினாத்தாள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடு எவ்வாறு இடம்பெற்றது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி இதனுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன வலியுறுத்தியுள்ளார்.
மேலும் விரைவில் குறித்த பாடத்திற்கான பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.