வட மத்திய மாகாணத்தில் வினாத்தாள் கசிவு: இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு

Date:

வட மத்திய மாகாணத்தில் 11ஆம் தர, தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள மொழி இலக்கிய வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க நேற்றைய தினம் நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சையும் ஒத்திப் போடப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி மற்றும் முதலமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதன்படி நேற்றுக்காலை 8.00 மணியளவில் 08 வலயங்களில் உள்ள 30 பிரிவுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பாடசாலைகளில், மேற்படி வினாத்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மற்றுமொரு வினாத்தாள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த முறைகேடு எவ்வாறு இடம்பெற்றது என்பதை கண்டறிய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...