விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு சேலை அணிந்து வராததால் சர்ச்சை..!

Date:

பன்னிப்பிட்டிய  தர்மபால வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்தர (G.C.E A/L Exam) விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தில் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக சட்டை (கவுன்) அணிந்து  வந்த பெண் ஆசிரியைகள் குழுவை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், ”நேற்று (16) பாடசாலை நடைபெறும் நாள் என்ற காரணத்தினால், பாடசாலைக்குள் பிரவேசிப்பதாயின் சேலை அணிய வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இருந்த போதிலும், மேற்படி ஆசிரியர்கள் சட்டை அணிந்து வந்ததால், பாடசாலைக்குள் அனுமதிக்க அதிபர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் பரீட்சைகள் ஆணையாளரின் கட்டுப்பாட்டில் இடம்பெறுவதால், இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லை என விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

எனினும், பாடசாலைக்கு என்று ஒரு குறிப்பிட்ட ஒழுக்கம் இருப்பதாகவும், பாடசாலைக்கு வரும் அனைவரும் அதைப் பின்பற்ற வேண்டும் என்று அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இரு குழுக்களுக்கும் இடையே  வாக்குவாதங்கள் இடம்பெற்ற போது அதைக் கட்டுப்படுத்த பொலிஸாரை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாததால், விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தை தற்காலிகமாக மூடுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

Popular

More like this
Related

Everything About Competitive Gaming in The Clubhouse – Interface Tour

Everything About Competitive Gaming in The Clubhouse – Interface...

Everything About Competitive Gaming in The Clubhouse – Interface Tour

Everything About Competitive Gaming in The Clubhouse – Interface...

Everything About Competitive Gaming in The Clubhouse – Interface Tour

Everything About Competitive Gaming in The Clubhouse – Interface...

7 மாதங்களுக்குள் 1126 சிறுவர் துஷ்பிரயோக புகார்கள்!

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக...