2024 தரம் 5 புலமைப்பரிசில்: வெளியான 3 வினாக்களுக்கும் இலவச புள்ளிகள் வழங்கப்படும்

Date:

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கசிந்த மூன்று கேள்விகளுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம்  அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி.அமித் ஜயசுந்தர இன்று (1) மாலை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட இந்தத் தீர்மானமானது, பாடசாலை அனுமதிகள் மற்றும் புலமைப்பரிசில்களுக்கான நுழைவாயிலாகச் செயற்படும் அதிக போட்டித்தன்மை கொண்ட பரீட்சையின் நேர்மையை உறுதி செய்வதையும் ஒருமைப்பாட்டைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பரீட்சைக்கு முன்னதாக மூன்று கேள்விகள் கசிந்ததாக எழுந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் உள்ளடக்கப்பட்ட 03 வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியிடப்பட்டதாக கூறி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வந்த வழக்கின் தீர்ப்பு நேற்று (31) அறிவிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பின்படி, பரீட்சைகள் ஆணையாளர் நடைமுறைப்படுத்துவதற்கான மூன்று பரிந்துரைகள் வழங்கப்பட்டன. அதன்படி, விடைத்தாள்களுக்கான புள்ளிகளை வழங்கும் போது சர்ச்சைக்குரிய மூன்று கேள்விகளை நீக்கி மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல்

குறித்த மூன்று கேள்விகளுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்குதல்.

முதலாவது வினாத்தாளுக்காக பரீட்சையை மீண்டும் நடத்துதல். இந்த பரிந்துரைகளில், மிகவும் பொருத்தமான நடவடிக்கையை பின்பற்றுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி, ஒவ்வொரு பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தும் போது ஏற்படக்கூடிய பொருத்தமான மற்றும் பெருத்தமற்ற தாக்கங்கள் தொடர்பில் இது மிகவும் நியாயமான மற்றும் பொருத்தமான இலக்கம் 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வினாக்களுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு அமைய மதிப்பீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து பெறுபேறுகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

 

 

 

Popular

More like this
Related

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...