உலக முஸ்லிம்களின் புனிதஸ்தலமான மதீனாவும் மக்காவும் அமைந்திருக்கின்ற சவூதி அரேபியாவானது உலகம் பூராக உள்ள மக்களுக்கு பல்வேறு மனிதாபிமான உதவிகளை மிகச்சிறப்பாக செய்து வருகின்ற அதேவேளை முஸ்லிம்களுடைய மார்க்கம் தொடர்பான விடயங்களிலும் தன்னுடைய பங்களிப்பை தொடராக செய்து வருகின்ற ஒரு நாடாகும்.
அந்த வகையில் பல வருடங்களாக சவூதி அரேபியா அரசு குறிப்பாக அதனுடைய தொண்டு நிறுவனங்களும் கூட இலங்கை முஸ்லிம்களுக்கு ரமழான் நெருங்குகின்ற போது பேரீச்சம் பழங்களை அன்பளிப்பாக வழங்குகின்ற ஒரு மரபு தொடராக இருந்து வருகின்றது.
அந்தவகையில் இம்முறையும் ரமழான் நோன்பு நெருங்கியிருக்கின்ற சந்தர்ப்பத்தில் சவூதி அரேபியா அரசு 50 தொன் பேரீச்சம் பழங்களை இலங்கைக்கு வழங்கியிருப்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
இந்த நிகழ்வு புத்தசாசன மத விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அவர்களின் பங்களிப்புடன் இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களும் கலந்துகொண்டு பேரீச்சம் பழங்களை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில்நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், ரிஷாத் பதியூதீன், பிரதி சபாநாயகர் ரிஸ்வி ஸாலிஹ், அரச அதிகாரிகள் மற்றும் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.