தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு புரியவைக்கும் வகையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விவாதத்தின் ஊடாக கிளீன் ஸ்ரீலங்காத் திட்டத்தின் உண்மையான நோக்கம் அதன் ஊடாக ஏற்பட போகும் சமூக மாற்றம் தொடர்பில் அரச ஊழியர்களும், மக்களும் மேலும் பல அறிவை பெற முடியும் என்றும் அவர் கூறினார்.