Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஆரம்பம்.!

Date:

“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) காலை சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில்  ஆரம்பமானது.

சீனங்கோட்டை  இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் இந்தக் கண்காட்சி ஜனவரி 10ஆம் திகதி வரை நடைபெறும்.

“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, கண்காட்சி கூடங்களை பார்வையிட்டதோடு இரத்தினக்கல் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இவ்வருட “Gem Sri Lanka – 2025” கண்காட்சியானது 103 கண்காட்சிக் கூடங்களை உள்ளடக்கியதுடன், அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்வனவாளர்கள் இதில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...