இந்தியா- சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் 48-வது சென்னை புத்தகக் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம்.

Date:

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் நடாத்தப்படும் சென்னை புத்தக கண்காட்சி அந்த வகையில் 48-வது சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த டிசம்பர் 27 முதல் ஆரம்பமாகியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் முன்னிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்து அரங்குகளைப் பார்வையிட்டார்.

வழக்கமாக புத்தக கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும். ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவைத் தொடர்ந்து அதுபோன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படாமல், வெறும் கண்காட்சி மட்டும் தொடங்கி வைக்கப்பட்டது.

புத்தகக் காட்சியில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அனைத்து அரங்குகளிலும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

48வது சென்னை புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலவச நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளன. 5 முதல் 14 வயதுக் குழந்தைகளுக்கான சிறப்பான புத்தகங்கள் மற்றும் சுவாரஸ்ய கதை புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க கூடுதலாக, பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகள் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவைகள் கழகம் உட்பட 10 அரசுத் துறைகள் கண்காட்சியில் அரங்குகளை அமைத்துள்ளன.

இந்த அரசு கண்காட்சி அரங்குகள் குடிமக்களுக்கு அரசு வெளியீடுகள் மற்றும் வளங்களை அணுகுவதற்கான தளத்தை வழங்குகிறது. குறிப்பாக, மனிதவள மற்றும் CE துறை முதல் முறையாக இந்த நிகழ்வில் பங்கேற்கிறது.

இது கலாச்சார மற்றும் மத இலக்கியங்களை மேம்படுத்துவதற்கான துறையின் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.

விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், வேலைநாட்களில் பிற்பகல் 2 முதல் இரவு 8.30 மணி வரையும் புத்தகக் காட்சியை பார்வையிடலாம்.

 புத்தகக் காட்சியையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஜன.7ம் திகதி காலை 8.30 மணிக்கு ஓவியப் போட்டியும், 8ம் திகதி காலை 8 மணிக்கு பேச்சுப் போட்டியும் நடத்தப்படுகிறது.

கண்காட்சியின் நிறைவு நாளான ஜனவரி 12ம் திகதி மாலை 6 மணிக்கு 25 ஆண்டுகள் பதிப்பகத் துறையில் பணியாற்றியவர்கள், பொன்விழா, நூற்றாண்டு கண்ட பதிப்பகங்கள், கொடையாளர்கள், நிறுவனங்களை பாராட்டி சிறப்பு கௌரவமும் செய்யப்பட இருக்கிறது.

அந்நாளின் சிறப்பு விருந்தினராக சுப்ரீம் கோர்ட் நீதிபதி அரங்க மகாதேவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...