ஈரானில் 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு!

Date:

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதி மன்ற நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், நீதிபதிகள் மொஹிசா மற்றும் அலி ரசானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலில் பாதுகாவலர் ஒருவரும் படுகாயமடைந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பின்னர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில், அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உள்ளது. அங்குள்ள நீதிபதிகளின் ஓய்வு அறைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கு அமர்ந்திருந்த நீதிபதிகள் இருவர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதிகள் தேசிய பாதுகாப்பு, உளவு பார்த்தல், பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை கையாண்டு வந்ததாகவும், சமூக ஆர்வலர்கள், போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கியவர்கள் என்றும் கூறப்படுகிறது.

உச்சநீதிமன்றத்திற்குள்ளேயே துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular

More like this
Related

ஐ.நா சபையின் 80வது பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதியின் உரை!

ஊழல் ஒரு தொற்றுநோய் எனவும் இது நாட்டின் அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும்...

போதைப்பொருள் தகவல்களை வழங்க விசேட இலக்கங்கள் அறிமுகம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் ஹெராயின், ஐஸ், கொக்கெய்ன் மற்றும்...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. அளவான மழை!

இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

Everything About Competitive Gaming in The Clubhouse – Interface Tour

Everything About Competitive Gaming in The Clubhouse – Interface...