உள்ளூராட்சித் தேர்தல் மனு விசாரணை நிறைவு: முடிவு விரைவாக அறிவிக்கப்படும்

Date:

பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட ‘உள்ளூராட்சி சபைத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம் அரசியலமைப்பிற்குட்பட்டதா என்பது குறித்த தனது முடிவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சபாநாயகருக்கு விரைவாக அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் இன்று (27) அறிவித்துள்ளது.

குறித்த திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து, அதன் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரண் என அறிவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்களின் விடயங்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம், மனுக்களின் விசாரணையின் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

குறித்த மனுக்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பர், தேசிய ஜனநாயக முன்னணியின் சட்டத்தரணி கௌஷல்யா ஜயவீர, கல்கிஸ்ஸை மாநகர சபையின் முன்னாள் மேயர் உபுல் கமகே, கடுவெல நகரசபை உறுப்பினர் ஷிரந்த பெரேரா ஆகியோர் தாக்கல் செய்தனர்.

 

 

 

 

 

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...