காசாவில் குடும்பத்தை பாதுகாக்க மிகப்பெரிய பள்ளம் தோண்டி கூடாரம் அமைத்த தந்தை: அருகே உணவுக்காக காய்கறி தோட்டமும் அமைப்பு!

Date:

இஸ்ரேலிய தாக்குதல்களின் மத்தியில் தனது 10 பேர் கொண்ட குடும்பத்தை பாதுகாத்து வரும் காசாவைச் சேர்ந்த 37 வயதான தய்சீர் ஒபைட், தனது துணிச்சலாலும் பாராட்டத்தக்க முயற்சியாலும் எல்லோருக்கும் உதாரணமாகி உள்ளார்.

டெய்ர் அல்-பாலா பகுதியில் ஒரு பள்ளத்தை தோண்டி கூடாரம் அமைத்துள்ள அவர், ஊட்டச்சத்து குறைபாட்டுடன் போராடும் தனது குழந்தைகளுக்கு போசாக்கான உணவை கொடுக்க  ஒரு சிறிய நிலத்தில் காய்கறி தோட்டத்தையும் உருவாக்கியுள்ளார்.

மேலும், குளிர்காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் பலத்த மழை பெய்ததால், தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள, குடும்பத்தின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மழைநீரையும் சேமித்து வைத்துள்ளார்.

ஒக்டோபர் 7ஆம் திகதி அன்று போர் தொடங்கியதிலிருந்து  பல முறை இடம்பெயர்ந்த பின்னரும் போரின் அச்சத்தையும் தவிர்த்து குடும்பத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அவரது மனவலிமை பாராட்டத்தக்கது.

தய்சீர் ஒபைட்டின் இந்த வாழ்க்கைப் போராட்டம், காசா பகுதியின் பலஸ்தீனியர்களின் தைரியமும் மனவலிமையும் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...