காசாவில் தொடரும் மனித அவலம்: காசாவின் இந்தோனேசிய மருத்துவமனை இஸ்ரேலிய இராணுவத்தால் முற்றுகை: மருத்துவர்கள், நோயாளர்கள் பலவந்தமாக அவசர வெளியேற்றம்!

Date:

காசாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடிகளை கொண்ட இந்தோனேசிய மருத்துவமனை சகலவிதமான உட்கட்டமைப்புகளையும் கொண்ட ஒரு மருத்துவமனை.

அந்த மருத்துவமனை இப்பொழுது இஸ்ரேலிய இராணுவத்தால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் இருக்கின்ற மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ ஊழியர்கள் உட்பட அங்கே இருக்கின்ற நோயாளர்கள், காயமடைந்தவர்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவரும் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறி அவர்கள் காசாவுடைய பிரதான நகரப் பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டும் என்று இப்பொழுது இராணுவத்தினரால் கட்டளையிடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே வடக்கு பகுதியில் பல பிரதேசங்கள் முற்றுகையிடப்பட்டு, கமால் அத்வான் மருத்துவமனை போன்றவையெல்லாம் முற்றாக சேதமாக்கப்பட்ட நிலைமையிலே இந்த மருத்துவமனையும் இன்னும் சில மணித்தியாலங்களில் மூடப்பட்டு அந்த மக்களை துன்புறுத்துகின்ற மற்றொரு செயலிலே இஸ்ரேலிய  இராணுவம் இறங்கி இருக்கிறது.

இந்த படுபயங்கரமான அச்சுறுத்தலான மனிதாபிமானமற்ற இந்த செயலை இஸ்ரேல் தொடர்ந்து செய்து வருகின்ற சூழ்நிலையிலே இதனை உலகம் இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் கவலைக்கிடமாக உள்ளது.

இந்தோனேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் கூறுகையில்,

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் கமால் அத்வான் மருத்துவமனையை தாக்கி அங்குள்ளவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய ஒரு வாரத்திற்குப் பிறகு, இம்மருத்துவமனைக்கு தாக்குதல் நடத்தப்படுகிறது..

வடக்கு காசாவில் இப்போது மருத்துவமனைகள் எதுவும் இல்லை, இதனால் அப்பகுதியில் உள்ள 300,000 பலஸ்தீனியர்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...