ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

Date:

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக இந்த சந்திப்பில் தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி தெரிவித்திருந்தார்.

ஐக்கிய அரபு இராச்சிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தற்போது புதிய அரசியல் போக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமேரி, கடந்த காலங்களில் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழல் இருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுமார் 150,000 இலங்கையர்கள் பணியாற்றுவதாகவும் எதிர்காலத்தில் இந்த வேலை வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தவும் இலங்கை நிபுணர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் காலித் நாசர் அல் ஆமேரி தெரிவித்தார்.

இலங்கையுடனான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த ஐக்கிய அரபு இராச்சியம் தயாராக இருப்பதாகவும், எதிர்காலத்தில் இது தொடர்பாக புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள விரும்புவதாகவும் தூதர் மேலும் தெரிவித்தார்.

மேலும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த இது வாய்ப்பாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

 

 

Popular

More like this
Related

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது: சுகாதார அமைச்சு

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 'என்டோரோமிக்ஸ்' (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக...

மார்பக புற்று நோயால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால்...

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இந்தியா பிரதமருடன் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,...

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது!

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ்...