நாட்டின் பல பாகங்களிலும் மழையுடனான வானிலை அதிகரிக்கும்!

Date:

நாளை முதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊவா மாகாணத்திலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, மாகாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Popular

More like this
Related

Everything About Competitive Gaming in The Clubhouse – Interface Tour

Everything About Competitive Gaming in The Clubhouse – Interface...

7 மாதங்களுக்குள் 1126 சிறுவர் துஷ்பிரயோக புகார்கள்!

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக...