பாடசாலை மாணவியை கடத்தி சென்ற மர்ம கும்பல்: விசாரணைகள் தீவிரம்

Date:

கண்டி மாவட்டம் – கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில்  மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவரை வேனில் வந்த மர்ம கும்பல் கடத்திச்செல்லும் சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காம்பொல – மரியாவத்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாத்திமா ஹமீரா என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது,  ஒரு சிறிய கருப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை  கடத்திச் சென்றுள்ளனர். பயந்துபோன மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியதுடன்,  அவரை காப்பாற்றுவதற்கு நபரொருவர் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கடத்தலில் ஈடுபட்டவர் கம்பளை – கஹடபிட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மொஹமட் நசீர் எனவும் கடத்தலில் ஈடுபட்ட நபர் சிறுமியின் உறவினர் என்பதுடன் குறித்த நபர் கத்தார் மற்றும் ஜப்பானில் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ரக வாகனம் துருவெல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

 

 

 

 

 

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...