பெண்களை மோசமாக நடத்தியதாக தாலிபான் தலைவர்களை கைது செய்யப்போகும் சர்வதேச நீதிமன்றம்!

Date:

பெண்கள் மற்றும் யுவதிகள் துன்பறுத்தப்பட்டதாகவும் அவர்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டு தாலிபான் அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சர்வதேச குற்றவிவியல் நீதிமன்றத்தில் பிரதான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தாலிபான்களின் உயர்மட்டத் தலைவர் ஹைபதுல்லாஹ் அஹன்ட்ஸதா (Haibatullah AKHUNDZADA) மற்றும் பிரதம நீதியரசர் அப்துல் ஹக்கீம் ஹக்கானி (Abdul Hakim HAQQANI) இருவரும் பாலின அடிப்படையில் மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று சந்தேகப்பதற்கான வலுவாக காரணங்கள் உள்ளன என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பெண்களையும் யுவதிகளையும் கிரிமினலாக கருதி துன்புறுத்துவதற்கும் பாலினம் தொடர்பான தாலிபான்களின் கருத்தியலுடன் ஒத்துப்போகாதவர்களை துன்புறுத்துவதற்கும் இவர்களே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...