ரோஹிங்யா மக்களுக்கு தொடர்ந்து அடைக்கலம் வழங்குமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

Date:

ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக இன்றைய தினம் (10) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘மியன்மார் ரோஹிங்யா அகதிகளை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லவும்,  அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப வேண்டாம்’ என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக கோரிக்கை அடங்கிய கடிதமொன்றும் போராட்டக்காரர்களால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

 

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...